News August 16, 2024
புதுச்சேரி – சென்னை ரயில் ரத்து

சென்னை தாம்பரத்தில் பிளாட்பாரம் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், தென்மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டு வரை இக்கப்படுகின்றன. இந்நிலையில், புதுவையில் இருந்து காலை 5.35 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும், சென்னையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புதுவைக்கு புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஆக.17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களுக்கு சீல் வைத்த கலால் துறை

புதுச்சேரியில் ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.
News August 11, 2025
ரெஸ்டோ பார் கொலை; சிபிஐ விசாரணை வேண்டும்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி ரெஸ்டோ பார்மாணவர் கொலை வழக்கில் காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இல்லையென்றால்
காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
வைரமுத்துவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கன்டன ஆர்ப்பாட்டம் இந்திரா காந்தி சிலை அருகே இன்று நடைபெற்றது. இதில், கடவுள் ராமரை இழிவுபடுத்தி வைரமுத்து பேசியதாக கூறி நடைபெற்ற ஆர்பாட்டத்தில், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில், ஏராளமான பாஜகவின் கலந்து கொண்டு வைரமுத்துவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வைரமுத்துவின் உருவப்படத்தை கிழித்து எறிந்தனர்.