News March 28, 2025
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, வரும் 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அமைக்கப்பட்டுள்ளன. பகுதியில் 146 தனியார் பள்ளிகளை பள்ளிகளைச் 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
Similar News
News November 21, 2025
புதுவை வீரர்கள் ஆசிய போட்டியில் பங்கேற்பு!

ஆசிய அளவிலான டாட்ஜ்பால் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில், வருகிற 23ஆம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. அதில் பங்கேற்க இந்திய அணி மலேசியா சென்று உள்ளது. இந்திய அணியில் புதுச்சேரி பாகூரை சேர்ந்த தர்ஷன், பத்மநாபன், தனிஷ்கா, விஜேஷ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரர்களை புதுச்சேரி முதலமைச்சர், பாகூர் எம்எல்ஏ செந்தில்குமார் நேற்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
News November 21, 2025
புதுச்சேரி: கைவினை கண்காட்சி துவக்க விழா

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினை விற்பனை மையம் மற்றும் கண்காட்சி துவக்க விழா, புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சீனியர் எஸ்பி கலைவாணன் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், 10க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
News November 21, 2025
புதுச்சேரி: தொடர்ந்து வெளுத்து வாங்க போகும் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


