News February 23, 2025

புதுச்சேரி காகிதமில்லா சட்டப்பேரவையாக மாற்றம்

image

புதுச்சேரி மாநிலத்தில் காகிதமில்லா சட்டப்பேரவை பயிற்சி அரங்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்  முன்னிலையில் முதலமைச்சர் என். ரங்கசாமி ரிப்பன் வெட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன்  சட்டமன்ற உறுப்பினர்களுடன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்.

Similar News

News February 24, 2025

தேர்வு அச்சத்தை போக்க 14416 எண்ணிற்கு டயல் செய்யுங்கள்

image

புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு பயத்தில் இருந்து விடுபட கட்டணமில்லாத 14416 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மனநல துறை டாக்டர் பாலன் கூறுகையில், ‘பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் ரிலாக்ஸான மனநிலையில் இருக்க வேண்டும். தேர்வு பயம் இருந்தால் மாணவர்கள் கட்டணமில்லாத தொலைபேசி 14416 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச மன நல ஆலோசனை பெறலாம்’.

News February 23, 2025

புதுவை போக்குவரத்து துறை எச்சரிக்கை

image

புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை. பொதுமக்கள் சொந்த வாகனத்தை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வணிக நோக்கத்திற்காக வாகனம் பயன்படுத்தும்போது அதற்கான வரி செலுத்தி பெர்மிட் பெற வேண்டும். மஞ்சள் நிற நம்பர் பிளேட் பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

News February 22, 2025

விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய புதுச்சேரி போக்சோ கோர்ட்டு

image

விழுப்புரம் மாவட்டம் கயத்தார் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன்(31) கடந்த 27.06.2019 அன்று திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜானகிராமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பெற்றோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!