News January 14, 2025
புதுச்சேரி கவர்னருக்கு சபாநாயகர் வாழ்த்து

தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். அது துணைநிலை ஆளுநரின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News December 8, 2025
புதுச்சேரி: பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்வில், முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா, பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து, வரவேற்றனர்.
News December 8, 2025
புதுவை: கல்லூரி மாணவி தற்கொலை

வில்லியனுார் அருகே கனுவாப்பேடையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் ரூபிகா(19) B.Sc., படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக வில்லியனுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலையும் செய்துள்ளார். இவர் வேலைக்கு சென்று இரவு நேரம் கடந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரூபிகா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
புதுச்சேரி: நிதியை தாராளமாக வழங்க கவர்னர் வேண்டுகோள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் எல்லைகளை, இரவு-பகலாக பாதுகாக்கும் நம்முடைய இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப் படை வீரர்கள் அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய ஒற்றுமையை, தேசப் பற்றை மேலும், வலுப்படுத்தும் விதமாக கொடிநாள் நிதி தாராளமாக வழங்க வேண்டும் என்றார்.


