News March 14, 2025
புதுச்சேரி கடலில் மூழ்கி சிறுவன் பலி

புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிருமாம் பாக்கத்தை அடுத்த பனித்திட்டு கடற்கரையில் குளிக்கச் சென்ற சபரீஸ்வரன் (13) எனும் சிறுவன் கடலில் மூழ்கி மாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் தேடினர். நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு சிறுவன் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
Similar News
News April 29, 2025
உதவியாளர்கள் பணிக்கான தேர்வு- விடைக்குறிப்புகள் வெளியீடு

புதுவை மாநில அரசுத் துறைகளில் 256 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22,860 பேர் பங்கேற்று இந்த தோ்வை எழுதினர். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான தேர்வின் விடைக்குறிப்புகள் நிா்வாகச் சீா்திருத்தத் துறை <
News April 28, 2025
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ரவுடி கருணா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில் தலைமறைவாக இருந்த கர்ணாவை வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கருணா கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் வெளிவராத பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சஞ்சய் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
News April 28, 2025
பாண்டிச்சேரியில் பாகிஸ்தான் பெண்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பல நடவடிக்களை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுவையில் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பஷியா பானு விசா கெடு முடிவடைந்த நிலையில் அவர் நாட்டை விட்டு செல்லாமல் இருப்பதால் அவர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.