News August 15, 2024
புதுச்சேரி: ஆக.19இல் நேரடி சேர்க்கை

புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லாஸ்பேட்டையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்க கல்வி பட்டயப் படிப்புக்கு 34 இடங்கள் உள்ளது. இந்த படிப்புக்கு நேரடி சேர்க்கை வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் சேர பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Similar News
News November 27, 2025
காரைக்காலில் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக்கடலில் ‘டிட்வா புயல்’ உருவானதை அடுத்து காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில், 4ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காரைக்கால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
News November 27, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 27, 2025
மத்திய நிதி அமைச்சரை சந்தித்த புதுவை சபாநாயகர்

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்தார். பின் புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு, விரைந்து அனுமதி அளித்து மத்திய அரசின் மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்குவதற்கு, இந்த நிதி ஆண்டில் முதற்கட்ட நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் அளித்தார்.


