News April 9, 2025
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுவை அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார், நேற்று அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 53 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தி, 55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்
Similar News
News December 10, 2025
புதுவை: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

புதுவையில் ஓடும் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம், பெண் ஒருவர் நகையை பறித்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையம் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அந்த பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுவை: போலி மருந்து விவகாரம் குறித்து விளக்கம்

புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், “உண்மையான மருந்து உற்பத்தியாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே போலி மற்றும் சட்டவிரோத மருந்து உற்பத்தி தொடர்பான செயல்களில் எங்கள் சங்கத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை” என கௌரவத் தலைவர் பிரமோத், தலைவர் ரமேஷ்குமார், செயலர் சீனிவாசன், பொருளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் விளக்கியுள்ளனர்.