News January 10, 2025
புதுச்சேரி அமைச்சரவை இன்று கூடுகிறது
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்துடன் கடந்த ஆண்டு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது விதிமுறை அதன்படி அடுத்த மாதம் 14ஆம் தேதிக்குள் சட்டசபை கூட்டம் பட வேண்டும் இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் இன்று கூடுகிறது கூட்டத்தில் சட்டசபையை கூட்டுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது
Similar News
News January 10, 2025
புதுச்சேரியில் தொடர் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16, 17ஆம் தேதிகளில் புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக பிப்ரவரி 1 மற்றும் 8 ஆம் தேதி வேலை நாட்கள் என புதுச்சேரி அரசு இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே 14, 15 ஆகிய நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2 நாட்கள் மற்றும் சனி,ஞாயிறு சேர்த்து மொத்தமாக ஆறு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 10, 2025
பொங்கல் பணம் இன்று முதல் செலுத்தப்படும்: முதல்வர்
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் தொகுப்பிற்கான பணம் ரூ.750 இன்று (10-1-25) முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் ஆதி திராவிடர்களுக்கு வேட்டி சேலைக்கான பணம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
News January 10, 2025
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் வழங்கினார். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.