News March 21, 2024
புதுச்சேரி அதிமுக வேட்பாளர் இவர் தான்

புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 4, 2025
காரைக்கால்: நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் வெளியிட்டுள்ள செய்தியில், பொது இடங்களில் பன்றிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 7 தினங்களுக்குள் தாங்கள் வளர்க்கும் பன்றிகளையும், தெருவில் சுற்றி திரியும் பன்றிகளையும் அப்புறப்படுத்தி விடவேண்டும். விதிகளை மீறுவோர் மீது காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
News December 4, 2025
புதுச்சேரி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 4, 2025
புதுவை: சிறையில் மொபைல் போன்கள்-4 கைதிகள் மீது வழக்கு

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, விசாரணை கைதிகள் அறை மற்றும் பொது கழிப்பிடம் அருகே பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 4 கைதிகள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


