News April 9, 2025
புதுச்சேரி அதிகாரிகள் 4 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து

மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, அறிவியல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் யாசம் லக்க்ஷ்மிநாராயண ரெட்டி, வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர், தொழில்துறை இயக்குனர் ருத்ரகௌடு ஆகிய 4 அதிகாரிகள் பதவி மூப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்
Similar News
News December 19, 2025
புதுவை: ஊக்கத் தொகை பட்டியல் வெளியீடு

தோட்டக்கலை இணை வேளாண் இயக்குநர், “வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்படி மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.7,000, தென்னை சாகுபடி பெயர் பட்டியலில் உள்ளக் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.” என அறிவித்துள்ளார்.
News December 19, 2025
புதுச்சேரி மின்துறை முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “மின் கட்டண நிலுவை உள்ள நுகர்வோர் உடனடியாக நிலுவைத் தொகையை நேரடியாகவோ அல்லது இணையவழி மூலமாகவோ செலுத்த வேண்டும். ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலுவைத் தொகை உள்ளவர்களுக்கு, எந்த விதமான முன் அறிவிப்பும் இன்றி டிச.22 முதல் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இது மின்சாரத் துறை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
புதுவையில் ஊக்கத் தொகை உயர்வு!

புதுச்சேரியில், 1 அல்லது 2 பெண் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கும் ஊக்கத் தொகை தரப்படுகிறது. இதில் குறிப்பாக ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை தற்போது ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என புதுவை அரசு சார்பாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


