News March 19, 2024
புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.
Similar News
News December 22, 2025
புதுவையில் மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி

நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிளம்பர் சஞ்சய்(21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(23) என்பவரும், நெல்லித்தோப்பு செங்கேணியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் பிளம்பிங் வேலை செய்ய நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது மதியம் விக்னேஷ் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று திரும்பிய போது, சஞ்சய் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
புதுவை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தவும், விடுபட்டோரையும் புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கின்றன. இம்முகாம்கள் வாக்குச்சாவடி மையங்களில் வருகிற டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்நாட்களில் புதிய வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
News December 22, 2025
புதுச்சேரி: கோயில் சென்றவரை தாக்கியவர் மீது வழக்கு

முருங்கபாக்கம் பகுதியை சேர்ந்த கிருபா (45), அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் யுவராஜ் என்பவர் அவரை சம்பந்தமில்லாமல் திட்டி, ஓங்கி அறைந்துள்ளார். இதில் கிருபா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் யுவராஜை தேடி வருகின்றனர்.


