News December 4, 2024
புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தினால் 17 பள்ளிகளுக்கு நாளை (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுவை முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் புதுவையில் மழைநீர் தேங்கியுள்ள 17 பள்ளிகளுக்கு நாளை (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News September 16, 2025
புதுச்சேரி: ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
புதுவை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க உத்தரவு

மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குறைதீர் கூட்டத்தில் பேசுகையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பதை கண்காணிக்க நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பைகள் கிடப்பதை ஒழுங்குபடுத்த சிறப்பு தூய்மை பணி திட்டம் உருவாக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.
News September 15, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.