News August 14, 2024
புதுச்சேரியில் வீடுகட்ட ரூ. 5 லட்சம் மானியம்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ஆம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10-ஆம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்றார்
Similar News
News December 10, 2025
புதுவை: அமைச்சு பணியாளர்களுக்கு தேர்வு

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அமைச்சு பணியாளர்களுக்கான துறைசார் தேர்வு டிச.14-ம் தேதி புதுவை காரைக்கால், மாஹே, ஏனாம், புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டுகளை புதுவையில் தலைமை செயலகத்தில் உள்ள தேர்வு அறை அலுவலகத்தில் தங்களது அலுவலக அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “புதுச்சேரி அரசில் பணியாற்றி வரும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அரசு ஊழியர்களின் 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அசையா சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, வரும் 1-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் http://esalary.py.gov.in/ipr என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது.
News December 10, 2025
புதுவை கல்வித்துறையின் பணி மூப்பு பட்டியல் வெளியீடு

புதுவை கல்வித்துறையில் பணியாற்றி வரும் துணை முதல்வர்கள், ஆசிரியர்களின் பணி மூப்பு பட்டியல், பதவி உயர்வுக்காக தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2025 (இந்த ஆண்டு) வரை துணை முதல்வராக பணியில் சேர்ந்த 82 பேரின் பணி மூப்பு பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.


