News October 23, 2024
புதுச்சேரியில் விமான சேவை தள்ளிவைப்பு

புதுவையில் வரும் 27ஆம் தேதி இன்டிகோ விமான சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விமான சேவை தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரி கூறுகையில், இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் விமானத்தில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த சேவை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News November 19, 2025
புதுச்சேரி: சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதயவியல் மற்றும் சிறுநீரகவியல் துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் வரும் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து, காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.
News November 19, 2025
புதுவை: இனி சனிக்கிழமைகளிலும் பள்ளி!

புதுவை அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி. கல்வித்திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 10, 12-ம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடக்கவுள்ளது. அதனையொட்டி புதுவையில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இனிமேல் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்தவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அமன் ஷர்மா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


