News October 25, 2024

 புதுச்சேரியில் வாகன போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரியில் தீபாவளி பொருள்கள் வாங்க பொதுமக்கள் நேரு, அண்ணா வீதி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் அதிகளவில் கூடுவதை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம், தனியாா் தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் தலைமை வகித்தாா்.நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் எஸ் பி செல்வம் தெரிவித்தார்,. 

Similar News

News October 25, 2025

புதுவை: கணினி திறன் தேர்வு ஒத்திவைப்பு

image

புதுவை அரசின் தோ்வு அமைப்பின் உறுப்பினர் செயலர் ஜெய்சங்கா் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில், தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட கிராம நிா்வாக அதிகாரிக்கான கணினித் திறன் தோ்வு 26.10.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது, நிா்வாகக் காரணங்களால் இந்தத் தோ்வு 02.11.2025 அன்று நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (அக்.25) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

புதுச்சேரி: வங்கி சேவை தற்காலிகமாக நிறுத்தம்

image

புதுச்சேரியில் நாளை (25.10.2025) பாரத ஸ்டேட் வங்கியின் பராமரிப்பு பணிகள் காரணமாக இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை மதியம் 1.10 மணி முதல் 2.10 மணி வரை வங்கியின் உப்பி, IMPS, YONO, NEFT, RTGS ஆகிய இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM மற்றும் UPI லைட் சேவைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!