News September 15, 2024
புதுச்சேரியில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய மக்கள் நீதி மன்றம் நேற்று நடந்தது. புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் சுந்தர் வழிகாட்டுதலின் படி, நடந்த லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளுக்கு நடந்த லோக் அதாலத்தில் 857 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 கோடி 70 லட்சத்து 756 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News November 22, 2025
காரைக்காலில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் தங்களது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் (22.11.25), (23.11.25) ஆகிய தேதிகளில் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள் தங்களது BLO-வை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடிகளில் சந்தித்து சேவைகளை பெறலாம் என தேர்தல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
புதுச்சேரி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வருகிற நவ.24ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் எவரேனும் அக்கடல் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருபந்தால், அவர்களை நாளை 23.11.2025 தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
புதுவை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுவை, ரெட்டியார்பாளையம் சேர்ந்த தம்பதியினர் ததேயூ ராஜ் – உஷா. இவர்களது மூத்த மகள் லியோனாமரி தெரேஸ் என்பவர் சில ஆண்டுகளாக ரத்த சோகையால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றார். மேலும் அவர் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலால் லியோனாமரி தெரேஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


