News August 17, 2024
புதுச்சேரியில் முழு அதிகாரம் கவர்னருக்கே

புதுச்சேரியில் தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நேற்று கம்பன் கலைஅரங்கத்தில் நடைபெற்றது. அப்போது முதல்வர் ரங்கசாமி பேசும்போது புதுச்சேரியில் முழு அதிகாரம் கவர்னருக்கே உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் தேவை. மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் தற்போது புதுச்சேரிக்கு உள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் கூடுதல் வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.
Similar News
News December 23, 2025
காரைக்கால்: கலெக்டர் தலைமையில் கூட்டம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதைப்பொருள் அல்லாத
காரைக்காலை உருவாக்குவது குறித்து, ஆலோசனை மற்றும் கருத்துகேட்பு
கூட்டம் ஆட்சியர் ரவிபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. எஸ்எஸ்பி லட்சுமி சௌஜன்யா ஐபிஎஸ், சார்பு ஆட்சியர் எம்.பூஜா ஐஏஎஸ், கடலோர காவல்படை உதவி கமாண்டன்ட் பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News December 23, 2025
காரைக்காலில் வாக்காளர் திருத்தப்பணி சிறப்பு முகாம்

காரைக்காலில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்றுவருகிறது. இதில் தங்களுடைய பெயர்களை சேர்தல், நீக்கல், மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற 27, 28 தேதிகளிலும் மற்றும் (03.01.2026) மற்றும் (04.01.2026) ஆகிய தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
News December 23, 2025
காரைக்கால்: அரசு ஊழியர்களுக்கு அரசாணை வெளியீடு

காரைக்கால் (டிச.23) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் பணியின் போதோ, அல்லது ஒய்வு பெற்றோ இறந்துவிட்டால், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், மற்றும் நிதி சார்ந்த தணிக்கைத் தடைகள் அனைத்தும் தானாகவே ரத்தாகிவிடும். அது சார்ந்து எந்தவித ஒய்வூதியப் பலன்களையும் நிறுத்தக் கூடாது என அரசாணை வெளியிட்டுள்ளது.


