News December 6, 2024
புதுச்சேரியில் மக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரியில் நாளை (7-12-24) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம், இணைய வழி குற்ற பிரிவு காவல் நிலையத்தில் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இணையவழி குற்றம் சம்பந்தமாக சந்தேகம், குறை இருந்தால் மற்றும் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியப்படுத்தலாம். மேலும் அதற்கு உண்டான தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News October 22, 2025
புதுச்சேரி: 450 டன் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரியில் (20.10.2025) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மக்கள் புத்தாடை உடுத்தி தீபாவளி பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சுமார் 450 டன் குப்பைகள் சேர்ந்திருந்தன. இதனை நேற்று முழுவதும், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் துப்பரவு பணியாளர்கள் கொட்டும் மழையிலும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
News October 22, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் வெளியிட்ட தகவல்!

புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2023-2024 ஆம் ஆண்டுகளில், ஆன்லைனில் தீபாவளி பட்டாசு தள்ளுபடி மோசடி தொடர்பாக 50க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றோம். இந்த ஆண்டு அவ்வாறு மக்கள் ஏமாந்துவிட கூடாது என்பதற்காக முன்கூட்டியே விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதனால் தீபாவளி பட்டாசு தள்ளுபடி விற்பனையில் ஏமாந்தவர்களின் புகார்கள் 2 பேரிடம் பெற்றோம் என்றார்.
News October 22, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க