News September 13, 2024
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

புதுவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவின் படி, புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செப்.15ஆம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால் வரும் செப்.16ஆம் தேதி காலை 10 மணிக்கு வழுதாவூர் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் பொதுமக்கள் குறை தீா் முகாம் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
புதுவை: மலர்க்கண்காட்சி குறித்து ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி அரசு வேளாண்துறை சார்பில், புதுச்சேரியில் வரும் 2026 ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் 36வது காய்கறி, கனி மற்றும் மலர்க்கண்காட்சி நடத்துவது சம்பந்தமாக வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை செயலர், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 18, 2025
புதுவை காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி பயணம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஆய்வு கூட்டம், இன்று புதுடில்லி இந்திரா பவனில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டசபை தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர்.
News November 18, 2025
புதுவை: கோவை விழாவுக்கு முதல்வருக்கு அழைப்பு

பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் 10 வது முறையாக நாளை மறுநாள் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவிற்கும் கோவையில் நாளை இயற்கை விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த விழாவிலும் பங்கேற்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


