News April 7, 2025
புதுச்சேரியில் பிரபல குற்றவாளி அதிரடி கைது

கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தார். இவர் நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்காலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் கையெழுத்து இட செல்லாமல் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ஓதியஞ்சாலை போலீசார் ஸ்டிக்கர் மணியை மீண்டும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 19, 2025
புதுச்சேரி: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

புதுவை மக்களே உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை, செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ரிப்போர்ட்டராக பதிவு செய்ய <
News April 19, 2025
புதுச்சேரி: தனியார் வங்கியின் லிங்க் மூலம் மோசடி

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப்பில் தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்துள்ளது. வெங்கடேசன் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 18, 2025
புதுச்சேரி: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <