News April 24, 2025
புதுச்சேரியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

புதுச்சேரி கரியமாணிக்கம், ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(21). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
புதுச்சேரி: NR காங்கிரஸ் கட்சியின் துவக்க விழா

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழா இன்று உற்சாகமாக நடைபெற்றது. விழாவை கட்சியின் நிறுவனத் தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி, கட்சி கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் தொடர்ந்து பாடுபடுவோம் என உறுதி அளித்தனர்.
News February 7, 2026
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச மாநாடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதிநவீன விபத்து சிகிச்சை குறித்த சர்வதேச உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு, நவீன சிகிச்சை முறைகள் குறித்து கருத்துப் பகிர்வு செய்தனர்.
News February 7, 2026
புதுவை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


