News April 24, 2025
புதுச்சேரியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

புதுச்சேரி கரியமாணிக்கம், ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(21). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிவிப்பு

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வருகிற 15-ம் தேதி நடக்க இருந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் 17-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறும். அதன்படி, அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் ரவிபிரகாஷ் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
News December 13, 2025
புதுவை: முதியவரை தாக்கிய சிறுவர்கள்

வில்லியனுார், சேந்தநத்தத்தைச் சேர்ந்த முதியவர் வேலு என்பவர், வில்லியனுார் சென்று, ரயில்வே பாதை வழியாக நேற்று சென்ற போது, அவரை வழி மறித்த இரு சிறுவர்கள் அவரை சராமரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, சேந்தநத்தம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய இரு சிறுவர்களை பிடித்து, அரியாங்குப்பம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
News December 13, 2025
புதுச்சேரியில் 120 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடிகள் 1,200 வாக்காளா்களுக்கு மேல் இருந்ததால் அதன்படி 120 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.


