News August 2, 2024
புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024 -25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதுவையில் உள்நாட்டு நிதி வருவாய் ரூ.6.914 கோடியாக உள்ளது. மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடியாகும். நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2,066 கோடி கடன் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
Similar News
News August 9, 2025
டி ஐ ஜி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி காவல்துறை தலைவர் டிஜிபி அறிவுறுத்தல் படி, புதுச்சேரி உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது. அதன்படி, திருபுவனை காவல் நிலையத்தில் டிஐஜி சத்திய சுந்தரம் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
News August 9, 2025
முதல்வர் ரங்கசாமி பேட்டி

சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். இதில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.4750 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் நடைபெறவுள்ள பணிகளுக்கு இரண்டு தவணையில் இந்த நிதி புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும். 50 ஆண்டுகள் கழித்து இந்த கடனை திருப்பி செலுத்தப்படும். மிக குறைந்த 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வட்டியில் இந்த நிதியுதவி கிடைக்கிறது என்றார்.
News August 9, 2025
புதுவை: ரூ.1,42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <