News August 2, 2024
புதுச்சேரியில் நாளை விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வான ஆடி பெருக்கை உற்சாகமாக கொண்டாட உள்ளனர். இதையடுத்து புதுச்சேரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்.
Similar News
News October 18, 2025
புதுவை: நவோதயா பள்ளியில் சேர தேதி நீட்டிப்பு

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 9 மற்றும் 11-ம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தெரிவுநிலை தேர்விற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி வருகின்ற 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
News October 18, 2025
புதுவை: தமிழ் இலக்கண போட்டி தேர்வு அறிவிப்பு

“தமிழ் வளர்ச்சி சிறகம், தமிழ் இலக்கணப் போட்டி தேர்வை நடத்துகிறது. மாநிலத்தில் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இத்தேர்வு நடத்தப்படுகிறது. நவம்பர் 10-ம் தேதிக்குள் 9360962442 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு, பெயரினை பதிவு செய்யலாம்.” என புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை தமிழ் வளர்ச்சி சிறகம் சிறப்பு பணி அதிகாரி வாசுகிராஜாராம் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
புதுச்சேரி: ரகசிய குழு அமைப்பு!

தீபாவளியை முன்னிட்டு புதுவை காவல்துறையினர் ஆண்டுதோறும் தங்கள் பகுதிகளில் வணிகர்களிடம் தீபாவளி இனாமாக பட்டாசு, இனிப்பு, பரிசு பொருள்கள் பெறுவார்கள். சில நேரங்களில் கட்டாயப்படுத்தி பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து டி.ஜி.பி.ஷாலினிசிங், புதுவை போலீசார் யாரிடமும் தீபாவளி பரிசு பெறக்கூடாது என தெரிவித்துள்ளார். இதை கண்காணிக்க ரகசிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.