News April 16, 2024
புதுச்சேரியில் நாளை யோகா வகுப்பு

புதுவை: முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் யோகா வகுப்பு நாளை 17-ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. இந்த யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94432-77486, 94432-75040 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News December 8, 2025
புதுச்சேரி: பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்வில், முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா, பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து, வரவேற்றனர்.
News December 8, 2025
புதுவை: கல்லூரி மாணவி தற்கொலை

வில்லியனுார் அருகே கனுவாப்பேடையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் ரூபிகா(19) B.Sc., படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக வில்லியனுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலையும் செய்துள்ளார். இவர் வேலைக்கு சென்று இரவு நேரம் கடந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரூபிகா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
புதுச்சேரி: நிதியை தாராளமாக வழங்க கவர்னர் வேண்டுகோள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் எல்லைகளை, இரவு-பகலாக பாதுகாக்கும் நம்முடைய இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப் படை வீரர்கள் அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய ஒற்றுமையை, தேசப் பற்றை மேலும், வலுப்படுத்தும் விதமாக கொடிநாள் நிதி தாராளமாக வழங்க வேண்டும் என்றார்.


