News May 7, 2025
புதுச்சேரியில் நாளை புதுபேருந்து நிலையம் திறப்பு

புதுச்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தை புதுச்சேரி பொலிவுறு நகர திட்டம் (Smart City)-த்தின் மூலம் சுமார் 29.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையமாக மேம்படுத்த 28.06.2023 அன்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து நிலையில் நாளை (மே.02) திறப்பு விழா செய்ய ஏற்பாடு நடைபெற உள்ளது.
Similar News
News November 8, 2025
புதுவை: முன்விரோதத்தில் தந்தை-மகன் மீது தாக்குதல்

புதுவை அரியாங்குப்பம் நோணாங்குப்பம் பகுதி பூபாலன். இவர் ஓய்வு பெற்ற அரசுத்துறை டிரைவர். அவருக்கும், அதே பகுதி நடராஜன், முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் 2 பேரும் சேர்ந்து பூபாலனை தாக்கினர். இதை தடுக்க முயன்ற அவரது மகன் ஸ்ரீராம் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
புதுவை: 12th போதும்.. வங்கி வேலை!

புதுவை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
புதுவை: 17 போலீஸ்சார் இடமாற்றம்

புதுச்சேரி காவல்துறை தலைமையக எஸ்.பி. மோகன்குமார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் காவல் துறையில் 3 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 17 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி சப் இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து சிக்மா செக்யூரிட்டி பிரிவுக்கும், சிவசுப்ரமணியன் வில்லியனுார் போலீஸ் நிலையத்தில் இருந்து வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்


