News September 14, 2024

புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 857 வழக்குகளுக்கு தீர்வு

image

புதுச்சேரி மாநில நீதிமன்றங்களில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள வழக்குகளும் நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 21 அமர்வுகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 6305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 857 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Similar News

News November 26, 2025

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்?

image

புதுச்சேரி தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகிகள் இன்று கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் டிஜிபியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், புதுச்சேரியில் டிச.5ஆம் தேதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டனர். மேலும் காலாப்பட்டு முதல் உப்பளம் வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

News November 26, 2025

புதுவை: லோன் பெற்று தருவதாக பணம் மோசடி – இளைஞர்கள் கைது

image

புதுவை, கொடாத்துாரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி அவர் தன்னுடைய வங்கி விவரங்களை வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். பின், மர்மநபர் ரூ.54 ஆயிரம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் தான் லோன் பெறமுடியும் என கூறவே அவர் பணத்தை அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகாரின்படி சென்னையைச் சேர்ந்த வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News November 26, 2025

புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!