News August 10, 2024
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் வெயில் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதையடுத்து அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி, இன்றும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று(ஆக.,10) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
புதுச்சேரி: 618 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரியில் காலியாக உள்ள 618 அங்கன்வாடி பணியிடங்களுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.23) முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு நேற்று அறிவித்துள்ளது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 344 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காரைக்கால்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.