News January 8, 2025
புதுச்சேரியிலிருந்து புஷ்பா பட பாணியில் மது கடத்தல்
புதுச்சேரியில் இருந்து கோயம்புத்தூருக்கு மினி லாரியில் தனி அறை அமைத்து, புஷ்பா பட பாணியில் கடத்திச் செல்லப்பட்ட 2400 மது பாட்டில்களை நுண்ணறிவு போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஏழுமலை என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 10, 2025
புதுவை: இறைச்சி கடைகளை மூட உத்தரவு
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால் நடை அறுவை நிலையங்கள் மற்றும் ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் மூடியிருக்க வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 9, 2025
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் 10 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் மற்றும் படகை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய மத்திய வெளியுவுத்துறை அமைச்சருக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
News January 9, 2025
எச்.எம்.பி.வி., நோய் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம்
புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்.எம்.பி.வி., நோய் பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இது நீண்டகாலமாகவே உள்ளது புதுச்சேரியில் பாதிப்பு இல்லை. சுவாச நோய் தொடர்பாக நோயாளிகள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரியில் தற்போது ஆய்வக பரிசோதனை வசதி மற்றும் சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.