News August 10, 2024
புதுச்சேரிக்கு 10% நிதி உயர்த்தி வழங்க கோரிக்கை

சட்டப்பேரவையில் நேற்று (ஆக.09) கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, மத்திய நிதி குழுவின் வரி பகிர்மானம் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய நிதி ஆணைய மானிய சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய நிதி உதவியை நிர்ணயிக்கும் வரை புதுச்சேரிக்கு 10% நிதி உயர்த்தி வழங்க கேட்டு வருகிறோம் என்று பேசினார்.
Similar News
News December 24, 2025
புதுச்சேரி: கடலுக்கடியில் பரதநாட்டியம் ஆடிய சிறுமி

சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சிறுமி ஆராதனா ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவர் ராமேஸ்வரம் அருகே உள்ள கடல் பகுதியில் சுமார் 20 அடி ஆழத்தில், முழுமையான பரதநாட்டிய உடையில், ஆபரணங்கள் மற்றும் ஒப்பனையுடன் நிலப்பரப்பில் உள்ள மேடையில் ஆடுவது போல மிக நேர்த்தியாக நடனமாடியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
News December 24, 2025
உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கடந்த ஆக.14ஆம் தேதி முதல் புதன்கிழமைகள் தோறும் 9.30 – 11.30 வரை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் ரூ.150 செலுத்தினால் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. உரிமம் இல்லாமல் நாய்களை வளர்த்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News December 24, 2025
புதுவை: மாணவர்களுக்கு உதவி செய்த அமைச்சர்

இன்று புதுவை மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு, ஜூடோ போட்டிக்கு செல்ல இருக்கும் மாணவர்கள், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்பொழுது மாணவர்களின் பயண செலவிற்காக ரூ.10,000 வழங்கினார். நிகழ்வின் போது பல மாணவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.


