News March 19, 2024
புதுச்சேரிக்கு புதிய ஆளுநர்

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை நேற்று( மார்ச் 18) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.இந்நிலையில் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட திரவுபதி முர்மு, இந்த இரு மாநிலங்களின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி இன்று உத்தரவிட்டு உள்ளார்.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: படகு சவாரி மீண்டும் திறப்பு!

புயல் எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து, புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் படகு குழாம் கடந்த 3 நாட்களாக படகுகள் இயக்காமல் இருந்தன. இந்நிலையில், மழை குறைந்ததை தொடர்ந்து, படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு நேற்று படகுகள் இயக்கப்பட்டன. ஆனால், குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
News December 2, 2025
புதுச்சேரி: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

புதுச்சேரி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் <
News December 2, 2025
புதுச்சேரி: மழையால் இடிந்து விழுந்த பள்ளி சுவர்

புதுச்சேரி அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் அருகில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. டிட்வா புயலால் பெய்த மழையால், நேற்று சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின், 10 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, சுவர் பக்க த்தில் இருந்த, ஜூஸ், டிபன், சிக்கன் கடைகள் உட்பட 5 சாலையோர கடைகள் மீது சுவர் விழுந்ததில் கடைகள் முற்றிலும் சேதமடைந்தன.


