News April 26, 2025
புதுக்கோட்டை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News November 12, 2025
புதுகை: சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புன்னியவயல் கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது டாட்டா ஏசி வாகனம் மோதியதில் மூரியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி குமார் மற்றும் அவரது மனைவி பழனிமுத்து ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 12, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல் இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 11, 2025
புதுக்கோட்டை: ரயில்வேயில் வேலை.. ரூ.29,735 சம்பளம்!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


