News April 8, 2025
புதுக்கோட்டை: 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (marketing executive) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News September 15, 2025
புதுகை: சாலையோரம் நடந்து சென்றவர் பரிதாப பலி

ஆலங்குடி அடுத்த பாத்தம்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி (73).இவர் பாத்தம்பட்டி கிளை சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த சுந்தரமூர்த்தி(29) என்பவர் மோதியதில் சிவசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
News September 15, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் உள்ள மறமடக்கி, அறந்தாங்கி, தல்லாம்பட்டி, அழியாநிலை மற்றும் அரிமளம் ஆகிய துணைமின் நிலையங்களின் நாளை (16/9/2025) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News September 15, 2025
அன்பு கரங்கள் நிகழ்வில் ஆட்சியர் பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நாளை (15.09.2025) காலை 10:30 மணியளவில் அன்புக் கரங்கள் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.