News November 25, 2024
புதுக்கோட்டை: வாக்காளர் பட்டியலில் சேர்க்க 24,869 பேர் விண்ணப்பம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடந்த 16,17- ந் தேதிகளிலும் நேற்று முன்தினம், நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 24,869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Similar News
News December 10, 2025
புதுக்கோட்டை: தப்பி ஓடிய சிறை கைதி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த சிறுமியை, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கா பாலியல் வண்புணர்வு செய்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு. சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது போலீசிடம் இருந்து கைதி தப்பி ஓடியுள்ளார்.
News December 10, 2025
தந்தை பெரியார் விருது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து வரும் 18.12.25க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
News December 10, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


