News October 23, 2024

புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் ரயில் ரத்து

image

வங்கக் கடலில் உருவாகும் தானா புயல் ஒடிசா மேற்குவங்க மாநிலம் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து ஒடிசாவிற்கு இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் நெல்லை- ஷாலிமார் சிறப்பு ரயில், புவனேஸ்வரில் இருந்து வரும் ராமேஸ்வரம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News February 23, 2026

புதுகை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

புதுகை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News February 23, 2026

புதுகை: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

image

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

புதுக்கோட்டை: கார் விபத்தில் ஒருவர் பலி

image

இலுப்பூர் புறவழிச்சாலை வளையப்பட்டி பிரிவு சாலை அருகே, கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த தென்னரசு, பிலவேந்திரன் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு இலுப்பூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!