News April 18, 2025
புதுக்கோட்டை: ரேஷன் தொடர்பான புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, உங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 9445000311, 9445000924 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 26, 2025
JUST IN புதுக்கோட்டை: கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணு
News November 26, 2025
புதுகை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

கார்த்திகை தீபம் விழா அடுத்த மாதம் டிச.3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக திருநெல்வேலி – திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
புதுவை: மக்கள் தொடர்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

ஆலங்குடி தாலுகா குழந்தை விநாயகர் வருவாய் கிராமத்தில் வருகிற டிச.10 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் இன்று முதல் தங்களது கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.


