News May 17, 2024
புதுக்கோட்டை: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
புதுகை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

கார்த்திகை தீபம் விழா அடுத்த மாதம் டிச.3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக திருநெல்வேலி – திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
புதுவை: மக்கள் தொடர்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

ஆலங்குடி தாலுகா குழந்தை விநாயகர் வருவாய் கிராமத்தில் வருகிற டிச.10 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் இன்று முதல் தங்களது கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


