News August 17, 2024
புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு

ஜூலை 1ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் நேற்று இரவு சென்னைக்கு விமான நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் புதுக்கோட்டைக்கு வந்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் செய்யவும்
Similar News
News December 19, 2025
புதுகை: மது போதையில் அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கடைவீதி ஐஓபி ATM பகுதியில் கோபால் (41) என்பவர், நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.
News December 19, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறை அமைந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று (டிச.18) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.