News June 25, 2024
புதுக்கோட்டை மாவட்ட எம்.பி-கள் இன்று பதவியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட வெற்றி வேட்பாளர்களான காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ,மதிமுக கட்சியை சேர்ந்த துரை வைகோ, இந்திய முஸ்லீக் கட்சி நவாஸ் கனி ,ஆகியோர் இன்று நாடாளுமன்ற எம்.பி-களாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Similar News
News December 7, 2025
புதுகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
புதுகை: ரூ 11.13 கோடியில் நலத்திட்ட உதவிகள்

புதுகையில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நேற்று நடந்த அரசு விழாவில் 4535 பயனாளிகளுக்கு ரூ11.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.அருணா வழங்கினார். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை தொடங்கி வைத்தபிறகு நடந்த இந்த விழாவில் டிஆர்ஓ அ.கோ.ராஜராஜன், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, மாநகராட்சி மேயர் செ.திலகவதி, துணை மேயர் எம்.லியாகத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News December 7, 2025
புதுகை: மது போதையில் அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லட்சுமி தியேட்டர் அருகே பாண்டி (23) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை பிணையில் விடுவித்தனர்.


