News April 27, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (26.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News November 27, 2025
BREAKING: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நவ.28 (நாளை) மற்றும் நவ.29 ஆகிய தேதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
News November 27, 2025
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்றது. மேலும் இது வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டதின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.27) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த மேற்பனைக்காட்டை சேர்ந்தவர் ஜனனி(19). இவர் புதுக்கோட்டை தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது தாயுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகம் அவரது இல்லத்தில் எலி பேஸ்ட்டை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரில், கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


