News January 22, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.22) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அரவம்பட்டி, மங்கனூர், வடுகபட்டி, பெருங்கலூர், வீரடிப்பட்டி, கள்ளாக்கோட்டை, மட்டங்கால், வராப்பூர், கந்தர்வக்கோட்டை மற்றும்
அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News October 25, 2025
புதுக்கோட்டை: கிணற்றில் பெண் சடலமாக மீட்பு!

அறந்தாங்கி அருகே கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரது மனைவி பெரியநாயகி, கடந்த 3 நாட்களாக காணாமல் போன நிலையில், புகாரின் அடிப்படையில் நாகுடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் பெரியநாயகி இறந்து சடலமாக மிதப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடலை கைப்பற்றிய நாகுடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News October 25, 2025
புதுகை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (அக்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்டகாவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 25, 2025
முதல்வரிடம் காசோலையை வழங்கிய அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் 2024-25ஆம் நிதியாண்டில் 52 கோடியே 72 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டியதில், 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த ஈவுத்தொகையான 10 கோடியே 39 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி காசோலையை வழங்கினார்.


