News November 24, 2024
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
Similar News
News November 17, 2025
புதுகை: மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ஈபி அலுவலகம் அருகே, பெரியசாமி (38) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் மாத்தூர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.
News November 17, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி, கொடிகுளம், ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


