News April 25, 2025

புதுக்கோட்டை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ<> இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News December 1, 2025

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் விபத்தில் பலி!

image

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக பொருளாளர் மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.சி இராமையா. இவர் இன்று வாண்டா கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

News December 1, 2025

புதுக்கோட்டை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் இல்லத்திற்கே சென்று, அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளின் மூலம் (02.12.2025) மற்றும் (03.12.2025) ஆகிய தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவ.30) இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!