News March 30, 2025
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வம்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக விளங்குபவள் அன்னை பிரகதாம்பாள். திருகோகர்ணத்தில் உள்ள அன்னையின் தலத்திற்கு சென்று வழிபடாமல் அரச குடும்பத்தினர் எந்த காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். இந்த அம்மன் அரைக்காசு அம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். தமிழ்நாட்டில் வேறெங்கும் அரைக்காசு அம்மனுக்கு தனிக்கோயில் கிடையாது. மேலும் இங்கு வேண்டினால் தொலைந்த பொருட்களை மீட்டு தருவாள் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க.
Similar News
News April 5, 2025
புதுக்கோட்டையில் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதில் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிம் சிறப்பு முகாம் நடைபெறும். (SHARE பண்ணுங்க)
News April 5, 2025
மழையூர் டாஸ்மார்க் அருகே வாலிபர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் டாஸ்மாக் அருகே முருகேஷ் (20) என்ற வாலிபர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மழையூரில் அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அரிவாள் வெட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து மழையூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News April 4, 2025
வீடு மனை யோகம் அருளும் செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயிலில்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க..