News March 29, 2024
புதுக்கோட்டை: கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி!

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்ப்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை நேற்று காலை புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News April 11, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 11.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் விவரம். பொதுமக்கள் இரவு நேர உதவிக்கு காவல்துறை அலுவலர்களை அழைத்து பயன்படுத்திக்கொள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளனர்.
News April 11, 2025
புதுக்கோட்டை மீனவ குடும்பங்களுக்கு நற்செய்தி

புதுக்கோட்டையில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் 20,000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த காலத்தில், மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 11, 2025
புதுக்கோட்டையில் மீன் பிடிக்க தடை

புதுக்கோட்டையில் மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வ. விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதிகளில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெறுவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்.