News April 1, 2025
புதுக்கோட்டை ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏப்ரல் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரல் 7ஆம் தேதி தேர்வுகள் மற்றும் அவசர பணிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
புதுக்கோட்டை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலைய சரக கொலை முயற்சி வழக்கில் கைதான நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு குடியிருப்பில் வசிக்கும் பதிவேடு குற்றவாளிகள் பூபதி (30), மணி (எ) பாட்டில் மணி (27), கார்த்திகேயன் (21) ஆகியோர் மீது எஸ்.பி பரிந்துரையில் பேரில் கலெக்டர் அருணா உத்தரவிட்டதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
News August 11, 2025
புதுக்கோட்டை: BHEL நிறுவனத்தில் வேலை.. கடைசி வாய்ப்பு

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் இங்கே<
News August 11, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டையில் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, மாத்தூர், புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, திருமலை சமுத்திரம், நமணசமுத்திரம், திருவரங்குளம், லேணாவிளக்கு, இலுப்பூர், வீரப்பட்டி , மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், பாக்குடி, ராப்பூசல் மற்றும் புதுக்கோட்டை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.