News August 10, 2024
புதுக்கோட்டை எக்ஸ் எம்பி அறிவிப்பு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று புதுக்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் அன்பழகன் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், எக்ஸ் எம்பியுமான திருநாவுக்கரசர் கலந்து கொள்ள இருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் பங்கேற்கவில்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 14, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 13, 2025
கந்தர்வகோட்டை அருகே சூதாட்டிய 4 பேர் கைது

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சம்பேட்டை குளக்கரை அருகே நேற்று உதயகுமார் (37), ராஜா (49), கருப்பசாமி (44), பாலகிருஷ்ணன் (47) ஆகிய நான்கு பேரும் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News November 13, 2025
புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<


