News April 17, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 17.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்

Similar News

News September 15, 2025

புதுகையில் வேலை வாய்ப்பு முகாம்

image

விராலிமலை தனியார் மஹாலில் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று (செ.15) காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 36 வயது இருக்க வேண்டும். மாத ஊதியம் 20,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

புதுகை: சாலையோரம் நடந்து சென்றவர் பரிதாப பலி

image

ஆலங்குடி அடுத்த பாத்தம்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி (73).இவர் பாத்தம்பட்டி கிளை சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த சுந்தரமூர்த்தி(29) என்பவர் மோதியதில் சிவசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News September 15, 2025

புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் உள்ள மறமடக்கி, அறந்தாங்கி, தல்லாம்பட்டி, அழியாநிலை மற்றும் அரிமளம் ஆகிய துணைமின் நிலையங்களின் நாளை (16/9/2025) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!