News March 20, 2024
புதுக்கோட்டை அருகே பெண்ணின் விபரீத செயல்

இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை. அரிமளம் ஒன்றியம் இரும்பாடி காந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரவினா(23). இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த பிரவினா வீட்டில் பேனில் தூக்குமாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் எஸ்.ஐ.மனோகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Similar News
News September 14, 2025
புதுக்கோட்டை மாணவன் இந்திய குத்து சண்டை போட்டிக்கு தேர்வு

திருச்சியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டி நேற்று (செப்.13) நடைபெற்றது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் புதுகை மாணவன் கிஷோர் தங்கப்பதக்கம் வென்றார். அம்மாணவனை அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு செய்துள்ளனர். அவருக்கும் அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியருக்கும் கல்லூரி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News September 14, 2025
புதுக்கோட்டை: 16.09.2025 தேதியை குறித்து வச்சிக்கோங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தற்போது காணலாம்!
⏩புதுக்கோட்டை
⏩திருவரங்குளம்
⏩கொத்தமங்கலம் ,
⏩கறம்பக்குடி
⏩விராலிமலை
⏩விராலுார்
⏩பொன்னமராவதி
⏩திருமயம்
பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை அளித்து பயனடையலாம். SHARE பண்ணுங்க!
News September 14, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை,
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.