News September 14, 2024
புதுக்கோட்டை அருகே பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு

கீரமங்கலம் அடுத்த பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் அஜித் இன்ஜினியரிங் படித்துள்ளார். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது துரதிஷ்டவசமாக பாம்பு கடித்ததில் இறந்து போனார். இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 24 வயது இளைஞன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 28, 2025
புதுகை: 350 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல்

புதுக்கோட்டை மாநகரில், மேல 3ஆம் வீதி மீன் மார்க்கெட் மற்றும் டிவிஎஸ் முக்கம் பகுதி மீன் விற்பனைப் பகுதிகளில், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இரு இடங்களிலும் திடீர் சோதனை நடத்தியதில், 350 கிலோ கெட்டுப்போன மீனை பறிமுதல் செய்து 6000 அபராதம் விதித்தனர்.
News November 28, 2025
புதுகை: துணை நடிகர் திடீர் பலி

புதுகை நகர் மன்றத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சினிமா சூட்டிங் சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று மக்கள் கூட்டம் நிற்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துணை நடிகர் அய்யநாதன் (45), அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். நேற்று திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்து பலியானார். இது குறித்து நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.


